கோவை அருகே உள்ள குறிச்சிஅய்யாசாமி வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி ( வயது 44) , இவரது மகள் லதா. அவரது வீட்டில் சத்தமாக ரேடியோ வைத்து கேட்டுக் கொண்டிருந்தார். இதை அவரது அண்ணன் ராஜேஷ் கன்னா (வயது 42) ரேடியோ சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதை அண்ணன் ரமேஷ் கண்டித்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் கன்னா கத்தியால் அண்ணன் ரமேசை குத்தினார் . அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமலையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து ரமேஷ் தங்கை லதா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தம்பி ராஜேஷ் கன்னாவை கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.