போதையில் தம்பிக்கு போன் செய்துவிட்டு அண்ணன் தூக்கிட்டு தற்கொலை..

கோவை சங்கனூர் ரத்தினபுரி , நாராயண சாமி லே – அவுட்டை சேர்ந்தவர் கவுதம் என்ற ரமேஷ் (வயது 46 )குடிப்பழக்கம் உடையவர் . இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி தனது தம்பி மோகன்ராஜ் உடன்  செல்போனில் பேசினார் . அப்போது இன்னும் சிறிது நேரத்தில் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினாராம். இதை மோகன்ராஜ் நம்பவில்லை . இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது . பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்த போது ரமேஷ் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..