கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம்,பால விநாயகர் நகரை சேர்ந்தவர் மருத முத்து (வயது 41) கூலி தொழிலாளி .இவரது அண்ணி நேற்று அங்குள்ள பொதுக்கழிப் பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மருதமுத்து இந்த கழிப்பீடத்தை யாரும் உபயோகபடுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.இதில் கோபம் அடைந்த சித்ரா அங்கிருந்து சென்று விட்டார்.இதைத்தொடர்ந்து மருதமுத்து வீட்டில் முன்பு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு உள்ளார் .அப்போது அவரது அண்ணி சித்ரா முன் வாசலை கூட்டியுள்ளார். அதிலிருந்து மண் மற்றும் சிறு கற்கள் மருதமுத்து சாப்பிடும் தட்டில் விழுந்தது. இதில் கோபம் அடைந்த மருத முத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை சித்ராவின் மகன் குமரேசன் தட்டி கேட்டு உள்ளார். இதில் ஆத்திரமடைந்த மருது முத்து அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் கோபம் அடைந்த சித்ரா தனது கணவர் மற்றும் அவர்கள் சகோதரனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மருதமுத்துவின் அண்ணன்கள் விஜி மற்றும் குமரேசன் ஆகியோர் அங்கு ஆட்டோவில் வந்து இறங்கி தம்பி மருது முத்து சரமாரியாக அடித்துஉதைத்தனர். இதில் அவருக்கு கத்தி குத்தும் விழுந்தது .இதனால் மருதமுத்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்துபெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மருதமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஜி மற்றும் குமரேசனை தேடி வருகிறார்கள்.