கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சீனிவாசா நகரில் பூட்டி கிடந்த ஒரு வீட்டில் துணிகர திருட்டு நடந்துள்ளது.இந்த வீட்டின் உரிமையாளர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.. இந்த நிலையில் யாரோ இவரது வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த தங்கக்காசு ,தங்க கம்மல் மற்றும் வெள்ளி சாமான்கள் ,பணம் 25 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரின் உறவினர் சுகுமார் (வயது 34) சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply