கேரள வனத்தில் பற்றி எரிந்த காட்டு தீ… மளமளவென அக்காமலை புல்மேடு வரை பரவியது..!

வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை புல்மேடு. பசுமை நிறைந்த இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத் துறையினர் இந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புல்மேட்டின் ஒரு பகுதி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் ஒட்டியுள்ள பகுதியுடன் இணைந்து அமைந்துள்ளது. மறையூர் பகுதி புல்மேட்டில் காட்டுத் தீ பற்றியது. தீ மளமளவென அக்காமலை புல்மேடு வரை பரவி பற்றி எரியத் தொடங்கியது.
வால்பாறை வனச் சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனத் துறையினர் புல்மேடு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.