குத்தகைக்கு வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி..!

கோவை புதூர், ஸ்ரீ லட்சுமி நகரை சேர்ந்தவர் அப்துல் சித்திக் (வயது 57) இவர் குத்தகைக்கு “ஓ .எக்ஸ். எல் ” ஆப் மூலம் வீடு தேடி கொண்டிருந்தார்.அதில் தொடர்பு கொண்ட ராஜசேகர் என்ற ஜெகநாதன் அப்துல் சித்திக்கிடம் கோவை புதூரில் ஒரு வீடு குத்தகைக்கு உள்ளது என்று கூறினார். ஒரு வீட்டை அவருக்கு காட்டினார். பிறகு 100 ரூபாய் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.இந்த நிலையில் அப்துல் சித்திக்ரு10 லட்சத்தை வங்கி மூலம் அனுப்பி வைத்தார். ஒரு மாதம் கழித்து அந்த வீட்டின் உரிமையாளரான மூர்த்தி அங்கு வந்தார். அவர் அப்துல் சித்திக்கிடம் நான்தான் இந்த வீட்டில் உரிமையாளர்மாத வாடகை கொடுங்கள் என்று கேட்டார். பிறகு தான் அப்துல் சித்திக் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.இது குறித்து அப்துல் சித்திக் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து ராஜசேகர் என்று ஜெகநாதனை தேடி வருகிறார்..