வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை திருட்டு – வாலிபர் கைது..!

கோவை மாவட்டம்பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர்
ரெக்ஸ் மரியா ஹெப்பர் (வயது 30) இவர் கடந்த 26.12.2024 அன்று அவரது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரஞ்சித் என்பவர் போன் மூலம் ரெக்ஸ் மரியா ஹெப்பரிடம் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கூறியுள்ளார். உடனே ரெக்ஸ் மரியா ஹெப்பர் புறப்பட்ட நேரில் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 22 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றது தெரியவந்து, மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளபட்டது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று (30.12.2024) தனிப்படையினர் கோவை சுந்தராபுரம் பகுதியில் சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபாரக் அலி (வயது 31) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீட்டின் பூட்டினை உடைத்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் இதன் பேரில் முபாரக் அலியைகைது செய்து, அவரிடமிருந்து மேற்படி வழக்கின் செத்துக்களான சுமார் 22 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் விசாரணையில் மேற்படி நபர் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.