கோவையில் கார்- ஆட்டோ மோதல்: பயணி சாவு- டிரைவர் படுகாயம்.. 

கோவையில் கார்- ஆட்டோ மோதல்: பயணி சாவு- டிரைவர் படுகாயம்..  கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் ( வயது 32 )ஆட்டோ ஓட்டி வருகிறார் .இவர் நேற்று பீளமேட்டில் உள்ளஒரு தொழில்நுட்பக் கல்லூரி முன் ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஆட்டோ மீது மோதியது .இதில் ஆட்டோநொறுங்கியது..ஆட்டோவில் பயணம் செய்து வந்த கேரள மாநிலம் மூணாறு என்.ஜி. காலனியை சேர்ந்த காந்தி தாஸ் மகன் அமல்ராஜ் ( வயது 28) அதே இடத்தில் பலியானார் .ஆட்டோ டிரைவர் அமல்ராஜ் க்கு பலத்த காயம் ஏற்பட்டது இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்தகுனியமுத்தூர், பி.கே. புதூரை சேர்ந்த வினோத் மகன் பாலசுப்பிரமணியன் ( வயது 19) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.