சத்தியமங்கலம்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நம்பியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (29). இவரது மனைவி அம்பிகா. இருவரும் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனது நண்பரின் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் நம்பியம்பாளையம் செல்வதற்காக சத்தியமங்கலம் – கோவை சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். காரை கிரிதரன் ஓட்டினார். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் வினோபா நகர் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிரிதரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது மனைவி அம்பிகாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து- பெண் காயம்..!.
