சுடுகாட்டில் சீட்டாட்டம் – 6 பேர் கைது..!

கோவை காளப்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31 )மகேந்திரன் (வயது 41) மதன்குமார் ( வயது 31) கணேஷ் ( வயது 49 ) மற்றொரு மதன்குமார் (வயது 44) |திருச்சி வடுகபட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் ( வயது 44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணமும் , சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது..