கோவை மாவட்டம் பொள்ளாச்சி கள்ளன்காடு பகுதியை சேர்ந்தவர் 16 வயது
சிறுமி. அவர் பிளஸ்-1 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் காளிஸ்வரன் (27). இவருக்கு திருமணமாகி
விட்டது. கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று சிறுமி
வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த காளிஸ்வரன் திடீரென சிறுமியை தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த சிறுமியிடம் தனியாக வரும்படி கூறி உள்ளார். அதற்கு அந்த சிறுமி அவரை கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காளிஸ்வரன் அந்த சிறுமியை அவரது வீட்டின் அருகே
தூக்கி சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்து
போன காளிஸ்வரன் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து அந்த
சிறுமி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய
காளிஸ்வரனை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த காளிஸ்வரனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.