அறநிலையத்துறை அதிகாரி குறித்து அவதூறு பரப்பிய பத்திரிக்கையாளர், கோவில் ஊழியர் மீது வழக்குபதிவு .!!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவில் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் ஹர்ஷினி. இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் மருதமலை கோவிலில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வரும் தீனதயாளன் மற்றும் நந்தகுமார் என்ற சூரிய புத்திரன் ஆகியோர் தன்னைப் பற்றியும், தங்கள் குடும்பத்தை பற்றியும் தவறான தகவலை ஒரு பத்திரிக்கையில் வெளியிட்டதாக கூறியுள்ளார் .இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் விசாரணை நடத்தி பத்திரிக்கையாளர் நந்தகுமார் என்ற சூரிய புத்திரன்,கோவில் ஊழியர் தீனதயாளன் ஆகியோர் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..