திருத்தம் செய்யப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வக்கீல் மீது வழக்குப்பதிவு.

கோவை ஏப் 24

கோவைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 19 வயது பெண்ணை கடந்த மாதம் 23 -ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன்வக்கீல் அப்துல்ரசாக்(வயது 48) என்பவர் பின் தொடர்ந்து பாலியல் சைகை செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட புலன்விசாரணையில் மேற்படி நபர் மீது ஏற்கனவே அதே பெண்ணை பின் தொடர்ந்த தொல்லை கொடுத்த காரணத்திற்காக மேட்டுப்பாளையம் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது .

இந்நிலையில் வக்கீல்அப்துல் ரசாக்கை மேட்டுப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர் பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்திற்காக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தமிழக முதல்வர்உத்தரவின் படி சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டு அதில் உட்பிரிவு 7 சி-யின் படி இச்சட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் மனுவிட்டால் அல்லது வேறு எந்த முறையிலும், விசாரணை அதிகாரியின் அறிக்கையை பெற்ற பிறகு,குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பதிலளிக்க வாய்ப்பு அளித்து, இந்தச் சட்டத்தின் பிரிவு 4 அல்லது பாரதீய நீதி சட்டம் , 2023 (மத்திய சட்டம் 45 ஆப் 2023) ன் பிரிவு 74, 75, 76, 77, 78, 79 அல்லது 296 இன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் நடந்திருக்கிறது என்று முதன்மைப்படி நம்பிக்கையுடன் நிர்வாக மாஜிஸ்திரேட் நம்பினால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட நபருடன் எந்தவொரு வகையிலும் தொடர்பு கொள்ளவோ முயற்சிக்கவோ தடுக்கும் பாதுகாப்பு உத்தரவை பிறப்பிக்கலாம். இதில் தனிப்பட்ட, வாய்மொழி, எழுத்து, மின்னணு, தொலைபேசி அல்லது மூன்றாம் நபர்களின் மூலம் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் அடங்கும்.

2) பாதுகாப்பு உத்தரவை மீறுவது இப்பிரிவின் படி குற்றமாகும். இதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது இந்தச் சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை (இருவகையானதும் இருக்கலாம்), மற்றும் ரூ 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி அப்துல்ரசாக்கிற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரின் வேண்டுகோள் கடிதத்தை தொடர்ந்து கோவை வடக்கு கோட்டாட்சியர் மூலமாக ஓராண்டு பினை ஆணை பெறப்பட்டது. இப்பிணையத்தை மீறும் பட்சத்தில் திருத்தச்சட்டத்தின் படி குற்றம் புரிந்ததாக கருதப்பட்டு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ 1. லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இவ்வாறு புதிய திருத்தச் சட்டத்தின் படி கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஆணை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர் .கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.