கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி .நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (வயது 36) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11- வது வீதியில் பிரியாணி ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பெரம்பலூர் மாவட்டம், போலம்பாடியை சேர்ந்த பாபு (வயது 41) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலில் இருந்த ரூ.40 ஆயிரத்தை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜாபர் சாதிக், காட்டூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை ஒட்டலில் ரூ.40 ஆயிரம் கையாடல் – கேஷியர் கைது..!
