கோவை ரத்தினபுரி, கணபதி வெங்கடாசலம் ரோட்டை சேர்ந்தவர் பூபதி .இவரது மகள் அஸ்வினி. (வயது 26) இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்தது. அதில் “கோல்டு மேன் சச் ஸ்டாக் “என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது . இதை நம்பி அஸ்வினி பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு ...

கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவரது மகன் அஜ்மல் .இவர் பெரிய கடை வீதி உப்பு கிணறு சந்தில் நகைக்கடை நடத்தி வருகிறார் .நேற்று மாலையில் இவரது கடைக்கு ஒருவர் நகை வாங்குவது போல் சென்றார்.சில நகைகளை பார்த்தார். சிறிது நேரம் கழித்து தனக்கு எந்த நகையையும் பிடிக்கவில்லை ...

கோவை காந்தி பார்க் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21) மருந்து குடோனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை புதூர் அண்ணா நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை குடிபோதையில் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அருண் என்ற ஜோக்கர் (வயது 28 )தனது நண்பரான ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா ஆகியோர் நேற்று கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும், 8 சிரஞ்சியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகர் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 76) இவர் பி.எஸ். என்.எல் நிறுவனத்தில் மாவட்ட இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் வாட்ஸ் அப் அழைப்பில் ஒருவர் பேசினார். அவர் தன்னை சிபிஐ அதிகாரி என்றும் பழனிச்சாமி வங்கி கணக்கில் ...

கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் விக்ரமன் ( வயது 65 )பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி சுசிலா (வயது 60) இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது . விக்ரமனுக்கு குடிப்பழக்கம் இருந்தது .இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் நேற்று மாலை சிங்காநல்லூர் – வெள்ளலூர் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாலத்துக்கு அடியில் நின்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை ...

கோவை கணிமவள அதிகாரிகள் அவினாசி ரோட்டில் பீ ளமேடுஅருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ” கிராவல் ” மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியும் -மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஓட்டி வந்த சின்ன தடாகம், அம்பேத்கார் நகரை சேர்ந்த ...

கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பாலக்காடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும் குழியுமாக கிடந்தது. அப்போது அங்குள்ள குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி அந்த வழியாக ...

கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 30) கட்டிடத் தொழிலாளி .இவர் கடந்த 23ஆம் தேதி நண்பர்கள் 3 பேருடன் மது குடிக்க சென்றார். அப்போது மற்றொரு நண்பரை லோகநாதன் தரக்குறைவாக பேசினாராம். .இதனால் ஏற்பட்ட தகராறு அந்த நண்பரை லோகநாதன் தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் லோகநாதன் மீது ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் ...