கோவை புதூர், ஸ்ரீ லட்சுமி நகரை சேர்ந்தவர் அப்துல் சித்திக் (வயது 57) இவர் குத்தகைக்கு “ஓ .எக்ஸ். எல் ” ஆப் மூலம் வீடு தேடி கொண்டிருந்தார்.அதில் தொடர்பு கொண்ட ராஜசேகர் என்ற ஜெகநாதன் அப்துல் சித்திக்கிடம் கோவை புதூரில் ஒரு வீடு குத்தகைக்கு உள்ளது என்று கூறினார். ஒரு வீட்டை அவருக்கு காட்டினார். ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று தெலுங்குபாளையம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஆலாந்துறை சித்தராஜ் (வயது 37) தெலுங்குபாளையம்,வேடப்பட்டி ரோட்டை சேர்ந்த கருப்புசாமி ( வயது 45 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .105 ...

கோவை மாவட்டம் சூலூர், நடுபாளையம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் . இவரது வீட்டில் பெயிண்டிங் வேலை நடந்தது. அப்போது செல்வராஜின் மருமகள் வெளியே செல்வதற்காக பீரோவை திறந்து நகைகளை பார்த்த போது தங்க செயின், மோதிரம், கம்மல் உட்பட 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை . இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ...

டாட்டூ அதாவது உடலில் பச்சை குத்துவது பல வருடங்களாக நம்மூரில் இருக்கும் பழக்கங்களில் ஒன்று தான். வெளிநாடுகளிலும் இந்த பழக்கம் உள்ளது .கடந்த சில வருடங்களாக அந்த பழக்கம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. ஃபேஷன் என்ற பெயரில் டாட்டூ குத்திக்கொண்டு தங்களுடைய உடல் அமைப்பே மாற்றிக்கொள்ளும் விபரீத செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். அதிலும் ஏலியன் ...

கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு ...

கோவை வடவள்ளிஅருகே உள்ள நவாவூர் பிரிவு, அருணாச்சலம் வீதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 30) டைட்டல் பார்க்கில் பெண் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் , இவர் நேற்று மாலை வடவள்ளி – மருதமலை ரோட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது குழந்தையை கூட்டிக் கொண்டு நடந்து வந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ...

கோவை கவுண்டம்பாளையம், கந்த கோனார் நகரை சேர்ந்தவர் தங்கநாடான் (வயது 59) வியாபாரி. இவர் இன்ஜினியரிங் படித்து முடித்த தனது மகனின் வேலை விஷயமாக பலரிடம் சொல்லி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரவி என்பவர் அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி உடனே வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் . அதை ...

கோவை சரவணம்பட்டி ஜி .கே . எஸ். நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி கோகிலாமணி ( வயது 60)இவர் அங்குள்ள தனது மருமகன் கடையில் இருந்தார். அப்போது 25 வயது மதிக்க தக்க ஒரு ஆசாமி கடைக்குள் புகுந்து அவர் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ...

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சதாம் உசேன் .நேற்று இவர் கோவை புதூர் பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே திறந்த வெளியில் இருந்து 4பேர் மது அருந்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் சதாம் உசேன் அங்கு விரைந்து சென்றார். பொது ...

கோவையை சேர்ந்தவர் நிகேதன் ( வயது 32) இவர் பெண் தேடி வந்தார். இதற்காக திருமண தகவல் மையத்திலும் பதிவு செய்தார். அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் நிகேதனுக்கு அறிமுகமானார். 2 பேரும் செல்போனில்,வீடியோ கால் மூலம் மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனர். அப்போது நிகேதன் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் ...