கோவை ராமநாதபுரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சாந்தி (வயது 50) சர்வீஸ் இன்ஜினியர்.இவரது மகள் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவரது உறவினர் மூலமாக கோவையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சாந்திக்கு அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்.பி.ஐ.ஏடி.எம். மையத்தில் வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டை சேர்ந்த முருகம்மாள் வயது 45 என்பவர் பணம் எடுக்கச் சென்ற போது அங்கு பணம் எடுத்துத் தருவதாகக் கூறிய நபர் ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு அவரின் ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு அவர் சென்றவுடன் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 9 ஆயிரம் ரூபாய் ...
கோவை அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் அஸ்வின் ( வயது 23) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வாரத்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ...
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 45) இவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அங்குள்ள ஏடிஎம் மையம் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் அவரது ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அப்போது ...
கோவை செல்வபுரம் ,எல்.ஐ.சி. காலனி ,பாரதி ரோட்டை சேர்ந்தவர் பெரோஸ் (வயது 28) இவரது மனைவி பரண்யா (வயது 28 ) பெரோஸ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி தகாத வார்த்தைகளால் பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று பரண்யா செல்வபுரம் பாரதி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு (சி.ஐ.எஸ். எப்.) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் குமார் ராஜ் பரதன். இவர் நேற்று விமான நிலையத்துக்குள் ரோந்து சுற்றி வந்தார். அப்போது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்து இருப்பது தெரிய வந்தது. அவரை கையும் களவுமாக பிடித்தார்.. ...
கோவை : கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி மஞ்சுளா ( வயது 64 )இவர் கண் பரிசோதனை செய்வதற்காக ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வந்தார். காந்திபுரத்தில் இருந்து ஆர் எஸ் புரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினார். கண் மருத்துமனை ...
கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் ...
கோவை போத்தனூர் அருகில் உள்ள வெள்ளலூர், பசுபதி வீதியை சேர்ந்த சிவகுமார். இவரது மனைவி சாந்தி (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று சரக்கு ஆட்டோவில் அங்குள்ள கஞ்சிக்கோணம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 திருநங்கைகள் ஆட்டோவை முந்தி சென்று தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சாந்தியிடமும், ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம், விக்னேஸ்வரா காலனி சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 47) விவசாயி. இவர் தனது முதல் மனைவியான ஆசிரியையாக பணிபுரிந்து வந்த விஜயா என்பவரை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு அவர் விபத்தில் உயிரிழந்தது போல நாடகம் ஆடினார். இதற்கு அவரின் நண்பரான விசைத்தறி உரிமையாளர் இளங்கோவன் ( ...