கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். மிகுந்த பதற்றத்துடன் பேசிய அந்த பெண் தன்னை கணவர் அடித்து தாக்கி கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பூட்டி வைத்துள்ளதாகவும், தன்னை அவர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார் . இதை கேட்டு ...
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்த கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் குன்குரி காவல் நிலையத்தில் முத்தலாக் தடைச் சட்டப் பிரிவு 4-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “தனது கணவர் செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்ததாக ஒரு பெண் புகார் அளித்தார். 2007இல் இஷ்தியாக் அலாம் ...
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ராஜவீதி, உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 1586 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் மொத்தம் ரூ.14700/- ...
சேலம் மாவட்டம் வீரபாண்டி இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2010 ஆண்டு உயிரி உரங்கள் தயாரிக்கும் சன் பயோமினியூர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.65 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை ...
கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷாருக்கான் (வயது19) இவர் கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விற்பனை யாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பள்ளிக் கூடம் சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை . இதனால் ...
கோவையில் 4 மாதத்தில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது .போலீஸ் கமிஷனர் தகவல்… கோவை: கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரிப்பது, விற்பது, கடத்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ...
திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் ஒன்றாக வாழ்ந்த பெண்ணை மதம் மாற்ற வற்புறுத்தி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் கரூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதம் வாழ்ந்த நிலையில், பவித்ராவை மதம் மாற்ற ...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). ...
கொழும்பு: இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீதும் தூப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மக்கள் அமைதி காக்க ...
கோவை : கோவையில் கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் துரத்தி துரத்தி வெட்டிய 5 இளைஞர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரூடி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ...