சென்னை: சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் மற்றும் 2வது போக்சோ வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
புதுச்சேரி : “நான் ஒரு கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவள். எங்கள் அமைப்புச் சார்பாக உங்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்குகிறோம்” என்றுக் கூறி அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணிடமிருந்து 10 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சரவணன் (43), இவர் காமராஜர் சாலையில் கடையெடுத்து பியூட்டி ...
கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி,ஆசிரியை ...
சென்னை: சென்னையின் அடையாளகங்களில் ஒன்றான மெரினா கடற்கடையில் இருக்கும் கலங்கரை விளக்கம் காட்சி முனையாகவும் திகழ்கிறது .கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதியில் ட்ரான் கேமரா பறக்க தடை விதிக்கபட்டுள்ளது.மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கட்டிடத்தை ‘ட்ரோன் கேமரா’ மூலம் படம் பிடித்ததாக ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் பிடித்து ...
சென்னை: ஆன்லைன் விசாரணையின்போது பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தன்னுடைய கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் ...
இந்தியாவின் மின் விநியோகத்தை ஹேக்கர்கள் மூலம் கட்டுப்படுத்த சீனா முயற்சி மேற்கொள்வதாக தனியார் நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சதி வேலைக்காக நிபுணத்துவம் பெற்ற ஹேக்கர்களுக்கு பெரிய அளவில் சீனா நிதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தனியார் உளவு நிறுவனமான ரிக்கார்டட் ஃபியூச்சர் (Recorded Future) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- கடந்த ...
சாத்தான்குளம் அரசடி தெருவை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோரை, விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கியதில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் தந்தையையும், மகனையும் போலீசார் கொடூரமாகத் தாக்கியதாக சிபிஐ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ...
மத்திய பிரதேசத்தில் பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை விமர்சித்ததாக நாடக கலைஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பத்திரிகையாளர், யூடியூபர் என 8 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த சித்தி நகர போலீசார், 8 பேரின் ஆடைகளை கலைந்து தாக்கியுள்ளனர். ...
கோவை: ராமநாதபுரத்தில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நெசவாளர் பிரிவு செயலாளாரை, தாக்கி கத்தியால் குத்திய பாஜக பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை D1 ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிஜேபியின் நெசவாளர் பிரிவின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ராமநாதபுரத்தில் உள்ள எனது ஸ்டுடியோவில் புகுந்து எங்கள் கட்சியை சேர்ந்த ...
புதுக்கோட்டை: அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய கஞ்சா முட்டைகள், தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் ஒரு மாத சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதனால் கஞ்சா கடத்தல் கும்பல் பல்வேறு நுதன முறைகளை கையாண்டு கஞ்சா கடத்தல். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரி புறக்கரையை சேர்ந்த 4 மீனவர்கள் ...