கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்போது அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பதிலாக தவறுதலாக வேறு வங்கி கணக்கிற்கு ரூ.14.75 லட்சம் சென்றது. இது குறித்து ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ...
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்தரியில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குரும்பனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). விவசாயி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது வீட்டில் வேலை செய்வதற்காக அன்னை நகரை சேர்ந்த அங்கம்மாள் (64) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந் தேதி செல்வராஜின் மகள் இந்துமதி தன்னுடைய நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். 7-ந் தேதி ...
கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் பின்புறம் கழிப்பிடம் உள்ளது. இதனை யொட்டி இடிகரை செல்லும் சாலையும் உள்ளது. நேற்று மாலை இடிந்த மதில் சுவர் மீது ...
கோவையில் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் ...
கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான, சென்னை சிஐடி நகரில் உள்ள வீட்டில் கடந்த2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் மாயமான சில ஆவணங்கள், செந்தில்குமாரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸாருக்கு ...
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 7 அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் 7வது அமைச்சராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ...
சென்னை: வீடு கிடைக்காமல் திணறியவர் பின்னர் வாடகை வீட்டில் வசித்து வந்த காமராஜ், பல கோடி ரூபாய் சொத்துக்கு விற்பனை அதிபதியானார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மன்னார்குடி மாவட்டம் சோத்திரியத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் காமராஜ். இவர் ...
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த 2018 நவம்பரில் விலைப் பட்டியலில் ரூ.100 மதிப்புள்ள இரு பேனாக்கள் சலுகை விலையில் ரூ.90 என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை கோவை, முதலிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உண்மை என நம்பி இரு பேனாக்களை ரூ.90 கொடுத்து வாங்கினார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த ...
கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ...