கர்நாடக நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மற்றும் மோடியையும் தவறாக பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கைது செய்யப்பட்டார். ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கூறி மாணவிகளின் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ...
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ், அருண், ...
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கஙகள் மாணவர்கள் உள்பட இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதைத்தடுப்பதற்கு போலீசார் மத்தியில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கூண்டோடு பிடிக்க ...
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சென்னையில் புதுவிதமான போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு ...
பள்ளிகளில் அனைவரும் சீருடையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஹிஜாப் அணிய கூடாது என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து கர்நாடகாவில் முஸ்லிம் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு நிர்வாகி ஒருவர் பேசியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிய தடை ...
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழு(Sit) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ...
கோவை சிங்காநல்லூர்,உப்பிலிபாளையம் காமராஜர் ரோட்டை சேர்ந்தவர். சுரேஷ் (வயது 41) இவர் சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.இவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்- தனது கடை முன் வந்த திருநங்கைகள் மது , கனிமொழி, நிகிதா, பாப்சி ஆகிய 4 பேரும், தன்னை ஆபாச ...
திருவண்ணாமலையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற அந்த இளம்பெண் மீண்டும் கோவைக்கு வர முடிவு செய்தார். அதன்படி கடந்த 16ம் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு வந்தார் .அங்கிருந்து அரசு ...
கோவை அருகே அன்னூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னுார் பக்கம் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் அன்புராஜ்; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மகள் சந்திரகாந்தா (வயது 48) இவர் திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் ,சில ...
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து விதமான வங்கிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. இதையடுத்து வங்கி விதிமுறைகளை கடைபிடிக்காத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே ஆணை பிறப்பிக்க முடியும். அந்த வகையில் இந்தியாவில் வங்கி விதிமுறைகளை ...