கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் பா.ஜ.க ஆன்மிக ஆலயம் மேம்பாட்டு பிரிவு கோட்ட செயலாளராக உள்ளார் .அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய அலுவலகம் செல்வபுரம் சிவாலயா சந்திப்பு பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்த நாசர் பாஷா (வயது 36) என்பவரின் அண்ணன் வேலை செய்து வந்தார். ...
கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.என். மில்ஸ்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 45) ரியல் எஸ்டேட் அதிபர் .இவர் வீடுகளும் கட்டிக் கொடுத்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா ( வயது 41 ) இவர்களுக்கு 2 மகள்களும்,11 வயதில் ஜெய சூர்யா என்றமகனும் உள்ளனர். ஜெயசூர்யா அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு ...
கோவை அவிநாசி ரோடு – தென்னம்பாளையம் அருகே ஒரு கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த கார் ஆந்திர மாநில பதிவு எண் கொண்டதாகும். அதற்குள் யாரும் இல்லை. யாரும் உரிமை ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள விளாங்குறிச்சியில் அருள்மிகு. அங்காளம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அம்மனின் 5 பவுன் தங்க நகையை காணவில்லை. ...
கோவை சிங்காநல்லூர் இருகூர் பக்கம் உள்ள அத்தப்பகவுண்டன் புதூர், பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் விவசாயி. இவரது மனைவி வசந்தி. சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருதது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் 2 சிறுவர்கள் கையில் பையுடன் ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை,சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர்ர் உக்கடம் இஸ்மாயில் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர். எஸ். புரம், ...
கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோடு சிக்னல் அருகே உள்ள வணிக வளாகத்தில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது.இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா ஆகியோர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள அண்ணா நகர் ,முதல் வீதியில் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு மறைவான இடத்தில்சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8 வயது சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.அதே பள்ளியில் அவனது அக்காள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில் நேற்று முன் தினம் பள்ளி முடிந்து சிறுவன் வீட்டிற்கு சென்றான். அப்போது பெற்றோரிடம் உடல் வலிப்பதாக கூறி கதறி அழுதான். இதையடுத்து ...