நாடு முழுவதும் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தால் அத்தியாவசியப் பணிகள் ஏதும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுத் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இரு நாள்களும் 1 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு ...
இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. தமிழகத்திலும் ...
வேலூரில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து தந்தை மகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மின் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுந்துள்ளது. மின் வாகனங்களின் பயன்பாடு குறித்து நிபுணர்கள் வாயிலாக தெரிந்து கொண்ட தகவல்கள் என்னென்ன பார்க்கலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, நடுத்தர மக்களின் பார்வை தற்போது மின்சார வாகனங்களின் ...
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது. பேருந்தில் பாட்டு பாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செய்வது என ரூட்டு தல பிரச்சினை என்பதால் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகரின் பேருந்துகளில் தொடர்ந்து ...
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் ...
சண்டிகர்: பஞ்சாபில் பல முறை எம்எல்ஏ.,வாக இருந்தவர்களுக்கு இனி ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான பென்சனை (ஓய்வூதியம்) மட்டுமே வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அக்கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் வெளியிட்ட ...
சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும்பாலான நாடுகள் டாலர் வாயிலாகவே அனைத்து வர்த்தகத்திற்காகப் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் காரணத்தால், உலக நாடுகள் மத்தியில் டாலருக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அமெரிக்கா டாலருக்கு மாற்றாக வேகமாக வளர்ந்து வந்த கிரிப்டோ கரன்சியை ஆதரிக்காமல் தொடர்ந்து ஒதுக்கி வந்தது. ...
மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.3.2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல் மர்ரியையும், (H.E. Abdulla Bin ...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ், சையான், ...
பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில் கட்டும்படி எந்த ஒரு கடவுளும் கேட்பதில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கடவுளே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதனை அகற்றுவதற்கு உத்தரவிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அருள்மிகு பாலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பாக பொதுப் பாதையை ...