பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கும், வங்கி சட்ட திருத்த மசோதா-2021க்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு வங்கி தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அகில ...
சென்னை: விமான நிலைய வளாகத்திற்குள் முன்பகுதியில், 3.36 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில், ₹250 கோடி திட்டத்தில் 6 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம், மற்றும் வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி, 2018ல் தொடங்கியது. இதன் பணிகள் வேகமாக நடத்தப்பட்டு திறப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆறுதளங்கள் கொண்ட இந்த வளாகத்தில் ...
மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்படாமல் வைக்கப்பட்டு இருந்த நிலையில் கோர்ட் அனுமதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அனைத்து பதவிகளுக்கும் பாண்டவர் அணி தான் முன்னிலையில் இருந்தது. இறுதியில் அந்த அணியை சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி என அனைவரும் வெற்றி பெற்றனர். நீதி, ...
போலீசார் சட்டவிரோதமாக நபர் ஒருவரை காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி ( CCTV )பதிவுகளை ஓராண்டு அல்லது 18 மாதங்கள் சேமித்து வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த சரவண பாலகுருசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ...
சென்னை: தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் வழங்க முடியாது என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை ...
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மட்டுமே உயர்ந்தது என்பதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 அதிகரித்து ...
புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்வினையாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா ...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த உயர்நிலை தொழில் துறை குழுவினர் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த யுஏஇ குழுவினர் நேற்று முன்தினம் நகர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...
கொழும்பு ; இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி இரட்டிப்பாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு சமீபத்தில் வெகுவாக குறைத்தது. இதனால் ஏற்றுமதி, சுற்றுலா துறை பாதித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இதனால், அங்கு கடும் ...
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கான 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் குஷ்பு,கோவை சரளா,மனோபாலா,லதா சேதுபதி உள்ளிட்ட 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தலைவர், பொருளாளர், துணை தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ...