சோமனுார் : கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி, 52 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிலிருந்து விசைத்தறிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி சார்பில், புதிய கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி, கடந்த, ஜன., 9ம் தேதி ...
சென்னை: டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையிலேயே அதன் சட்டவிதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்திருக்கிறது. மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்காமல் எந்த ...
இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை ...
வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை: தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, ...
மதுரை மாநகராட்சியில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. வரி வசூல் விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில், 2010ம் ஆண்டு முதல் 2022 வரை, வசூல் செய்யப்பட்ட வரித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள தொகை விவரங்களை ...
டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை ...
திருவண்ணாமலை அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2022-ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மங்கலம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, கருவூட்டல், சினைப் ...
சென்னை: கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக 2020 மார்ச் 24 முதல் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் வழக்கு விசாரணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. பின்னர் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வானதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை நடந்தது. ...
முதல்முறையாக முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்ப்பு. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் முதல்முறையாக பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளர். 250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்,தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் ...
சென்னை: நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளைச் சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. பல்வேறு கட்டத்துக்குப் பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7-ம் தேதி ...