சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிவகாசியில் உள்ள 48 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் போது ஆளும்கட்சி அதிகாரிகளையும், போலீசாரையும் மிரட்டி வாக்குகளை பதிவு செய்ய வைத்துள்ளதாகவும், இதனால், வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மத்திய அரசு ...

தமிழக பத்திரப்பதிவு துறையின் வருவாயை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. ...

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் பெண் போலீசார், உயரதிகாரிகளின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்று, ஓய்வுபெற்ற பெண் டிஜிபி ஸ்ரீலேகா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள காவல்துறையில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்றவர் ஸ்ரீலேகா. குற்றப்பிரிவு ஐஜி, போலீஸ் பட்டாலியன் ஏடிஜிபி, சிறைதுறை டிஜிபி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். ...

தமிழக பட்ஜெட் தொடர்பாக சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை. 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன்படி,இன்று காலை 11.30 மணிக்கு தொழிற்சாலை,சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழக ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று காலை 10 மணி முதல், வரும் 19-ம் தேதி ...

புதுடில்லி: நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் எனக்கூறி இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ...

குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து பொருட்களின் தரம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அவை கடுமையாக நோக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை. குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று ...

டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை கடந்த 2013ம் ஆண்டு முதல் ...

டெல்லி : ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம் என்பதே நமது நோக்கம் எனவும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்கு அதிகரிக்கும் என சஉலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். உலகளாவிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி கட்டங்களின் முதல் ...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் ( பிப்.19 ) நடைபெற உள்ளது. அதில் சுமார் 2.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்றும் (பிப்.17), நாளையும் (பிப்.18) சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் தலா 500 சிறப்பு பேருந்துகளை ...