கோவை:கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி ‘ரெய்டு’ நடத்தி, கணக்கில் வராத, ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கோவைப்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் போலீசார் ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ...

டெஸ்லா காரை விற்பதற்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை பயன்படுத்துவார்கள், வேலைவாய்ப்பை மட்டும் சீனாவுக்கு வழங்குவீர்களா. டெஸ்லா காருக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் தரப்படாது என எலான் மஸ்கிற்கு மத்தியஅரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் நிறுவனம் டெஸ்லா எனும் எலெக்ட்ரிக் கார் கடந்த ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில் பதிவு செய்தது. இந்தியாவில் வரிகள் அதிகமாக ...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி ...

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.   கௌதம் அதானி (Gautam Adani) என்ற இந்திய கோடீஸ்வரர், சிறு நிலையில் தொடங்கப்பட்ட வர்த்தகத்தை, மிகப்பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக, துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றியுள்ளார். இப்போது ஆசியாவின் பணக்காரராக ...

வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கிளப்களில் நேரடியாக காவல் துறையினர் சோதனை நடத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம். நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு விடுதி, சென்னை வடபழனி ஃபைவ் ஸ்டார் கிளப் ஆகியவை தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் விடுதிகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது எனக் ...

கூகுள் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவை மாற்றியதை அடுத்து இப்போது மீண்டும் மாற்றியுள்ளது. இணைய தேடுபொறிகளில் முதன்மையான இடத்தை பெற்றிருப்பது கூகுள் க்ரோம் நிறுவனம். கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவைக் கடைசியாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் லோகோவை மாற்றியுள்ளது. ஆனால் பழைய ...

போபால் : மத்திய பிரதேச அரசுக்கு சொந்தமான விமானத்தை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாக்கியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விமானியின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 2019 ஆம் ஆண்டு 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பீச்கிராப்ட் ஏர் கிங் என்ற 7 இருக்கைகள் ...

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ...

கொரோனாவை தடுக்க ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனா தொற்று அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பரவி வருவதால் மருந்து கண்டுபிடிப்பது மருத்துவத்துறைக்கு சவாலாக உள்ளது. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி ...