சென்னை : ரம்ஜான் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் வெளியூர் செல்வதால் சென்னை விமான உள்நாட்டு நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமான விமான டிக்கெட் கட்டணம் ரூ. 3,675 ...

ஓசூர் அருகே தூத்துக்குடியில் இருந்து ராயக்கோட்டை வழியாக பெங்களூரு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் எஞ்சினில் ...

கோவை: தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் 2,500 கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து தரப்படும் ...

மோசடி வழக்கில் பைன் பியூச்சர் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் ஏப்ரல் 28 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள எட்டு வாகனங்களை ஏலத்தில் விடுவது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ...

கோவை: கோவையில் சேதமடைந்து காணப்படும் மூன்று மார்க்கெட் வளாகங்களை ரூ.8.07 கோடி மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்துநிலையத்துக்கு எதிரே, எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் உள்ளது. இங்கு 120-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா மாநிலத்துக்கும் தினமும் காய்கறிகள் ...

மதுரை: தமிழகத்தில் வரும் 20-ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடுவதால் அன்றைய நாளில் பல ஆயிரம் கோடி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவு சிறு, குறு தொழில் நிறுனங்கள் அமையப்பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர ...

சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப்சிங் பேடி ஆகியோருடன் மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு, ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்ல மீனவர்கள் அனுமதி அளித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு ...

சென்னையை தலைமை இடமாக கொண்டு ஐ .எப். எஸ்.நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு 89, ஆயிரம் பேரிடம் ரூ. 6ஆயிரம் கோடி வசூலித்து ஐ.எப்.எஸ். நிறுவனம் மோசடி செய்தது. இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி.கபிலன் ரூ.5 கோடி ...

மதுரை: மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் பணியாற்றும் 21 பேரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் தாலுகா அலுவலகம், நில எடுப்பு பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்டம், கலால், முத்திரைத்தாள் பிரிவு என பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் பலருக்கு ஓராண்டு முடிந்துவிட்டது. இதனால் தாலுகா வட்டாட்சியர்கள் பலர் விடுமுறையில் ...

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ...