ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்கனவே தமிழக அரசு 10 மாவட்டங்களில் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையினருக்கு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரீடு நிறுவனமானது கடந்த 21 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் அரசுடன் இணைந்து பணி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரீடு நிறுவனம் எக்விடாஸ் வங்கியுடன் இணைந்து சத்தியமங்கலம் ஆணைக்கொம்பு மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம்முகாமில் ...
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, ‘அவள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது மகளிர் காவலர்களுக்கு நவரத்ன ...
இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விட அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தரமான அம்சங்கள், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது அமேஸ்ஃபிட் நிறுவனம். இந்நிலையில் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி (Amazfit GTR mini) எனும் ஸ்மார்ட்வாட்ச் ...
திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்தில் முதல் முறையாக 63 வயது மதிக்கத்தக்க அமர்நாத் என்ற நோயாளிக்கு இருதய குழாயில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு தெரிவித்ததாவது; வழக்கமாக இருதய குழாயில் ...
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் ...
கோவை பீளமேடு விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வளாகம் உள்ளது. இங்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் சரக்குகள் கையாளப்படுகின்றன. சேவை இல்லாத வெளிநாட்டுக்கு பாண்டட் டிரக் என்ற சேவை மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்குகள் அனுப்பப்படுகின்றன. மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன், வெளிநாட்டு சரக்கு ...
நீலகிரி மாவட்டம், குன்னூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் ரூ. 1.27 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. குன்னூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையில் லஞ்ச ஒழிப்பு ...
கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீசார் 2 குழுவினராக பிரிந்து கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினார். உள்ளே ...