கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் ...

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குழுமம் ஒரு சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான கடனைப் பெற்றுள்ளதாக தனது கடனாளர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாவிட்டாலும், இந்த தகவல் நம்பதகுந்த வட்டாரத்தில் வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ...

புழல் பெண்கள் தனிச்சிறையில் MSME சார்பில் விஜயகீதம் பௌன்டேஷன் மூலம் வயர் நாற்காலி,கட்டில் பின்னுதல், வயர் கூடைப் பின்னுதல், மெழுகுவர்த்தி செய்தல், மிதியடி செய்தல் ஆகிய ஒரு மாத கால பயிற்சி முடித்த 31 பெண் சிறைவாசிகளுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி சான்றிதழ்கள் வழங்கி தலைமை உரையாற்றினார். ...

லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் மோசமான சட்ட ஒழுங்கை கொண்டிருந்ததாகவும், தற்போது இந்த விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து ...

சென்னைத் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த சேவையை சென்னைத் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவல் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி, சென்னைத் துறைமுகம் – புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை ...

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாழை தோட்ட பகுதியில் மலைகிராம பழங்குடியின மக்கள் அக்கிராமங்களில் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்து கொள்ள இடம் அதற்கான இடம் ஒன்றை வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளிசெல்வம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடம் ஒன்றை ஒதுக்கி அந்த இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரஸ்ட் மூலமாக ...

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சை பிரிவு, எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு உள்பட ஏராளமான துறைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான தரவரிசை ...

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்தவித தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் ...

இலங்கையில் அரசு வசம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 ஐ உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ...