கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சந்திப்பு பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் என மாநகர பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது .இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் ‘கார்களில் வருவோரிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாகனத்துக்கான ...
கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ...
கோவை: சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக, பாலக்காட்டில் இருந்து பிப்ரவரி 28ஆம் தேதி பொள்ளாச்சி வழியாகச் ...
கோவை, சூலூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக 37 கடைகளுக்கு ரூ.12,175 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் ...
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு ...
சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ...
புதுடில்லி, :மாசு ஏற்படுத்தாத பசுமை மின்சார உற்பத்தித் துறை தங்கச் சுரங்கம் போன்றது. இத்துறையில் முதலீடு செய்ய மிகப் பெரும் வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்தத் துறைக்கு அதிக முக்கியத்தும் தரப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக இணைய வழி கருத்தரங்குகளுக்கு ...
குளிர்சாதன பெட்டிக்குள் கெட்டுப்போன சிக்கன் வைத்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய செல்போன் வீடியோ காட்சிகள் – ஹோட்டல் மேலாளரிடம் – வாடிக்கையாளர் வாக்குவாதம் கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் ...
உலக நாடுகள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இதற்கு சுமார் 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று ...
உலக நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆனால் சில வேலைகளுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதே இல்லை. அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா.? ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுத்து அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் ரசாயன வாயுக்கள் போன்றவற்றை பத்திரமாக கடைக்கு கொண்டு வர ...