கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தமிழரசு பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வந்த செல்வி சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு, உக்கரம், சாணார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களில் தென்னை மட்டைகள் காய்ந்த நிலையில் உள்ளதோடு, ஒரு விதமான மர்ம நோய் தாக்கியுள்ளதால் தென்னை மரங்களில் தேங்காய்கள் பிடிக்காமல் குரும்பைகள்  ...

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை – கோவை உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, 100 சதவீதத்துக்கு மேல் உள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, கேரளா காசர்கோடு – ...

டெல்லி : இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஜூன் 2023ல் சரக்கு ஏற்றுமதி 22.02% சரிந்து 32.97 டாலர்கள், அதாவது ரூ.2.62 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 2022ல் இதே காலகட்டத்தில் ரூ.3.44 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி நடைபெற்று ...

தக்காளி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 60 உயர்ந்து, ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. கிலோ ரூ. 140 வரை விலை சென்றது. சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ...

மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலி அசுர வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கிய மெட்டாவின் திரெட்ஸ் செயலி அறிமுகமான ஒரே நாளில் 5 கோடி பயனர்களை பெற்றது. முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் திரெட்ஸ்-இல் ...

சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஏழை மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் சாதாரண் என்ற ரயில் விடப்பட உள்ளது. வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 24 கோச்சுகள் ...

தமிழ்நாடு காவல்துறையின் டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் பணியாற்றி வந்த சைலேந்திர பாபு சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்ட நிலையில் காவல்துறையில் அதிரடி ...

தமிழகத்தில் 36 மாவட்டப்பதிவாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை, திருச்சிராப்பள்ளியில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வருமானவரித்துறை செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தது. இந்த நிலையில், சென்னை, திருநெல்வேலி மண்டலங்களில் பதிவாளா்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வெளியிட்டுள்ளாா். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளா், ...

இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தக்காளி விலையைத் தொடர்ந்து பச்சை மிளகாய், பருப்பு வகைகள் பிற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த வாரம் முதலே தக்காளி விலை சதமடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் பெட்ரோல்,டீசல், வெங்காயம் தக்காளி, மற்ற காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர ...