சென்னை: ஹைதராபாத் டெக்கான் விரைவு ரயில் நேற்று காலை சூலூர்பேட்டை- அக்கம்பேட்டை இடையே வந்தபோது, ஒரு பயணி அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். இதனால் அந்த ரயில் கலிங்க ஆற்றுப் பாலத்தின் மீது நின்றது. ரயிலின் குறிப்பிட்ட பெட்டியில் ஏற்பட்ட காற்று அடைப்பை சரிசெய்ய முடிவு செய்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, ...

டெல்லி: தமிழ்நாட்டில் ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு ...

ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் பெறப்பட்டு விட்டதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.. கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 ...

சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழைய அனுமதியில்லை என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: ‘தமிழ்நாட்டில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு ...

உத்தரவுகளை முறையாக நடைமுறைபடுத்தாத 3 வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.4.35 கோடியை ரிசா்வ் வங்கி அபராதமாக விதித்துள்ளது. இந்திய வங்கிகளின் விதிமுறை மீறல்களை கண்டிப்பான முறையில் கண்காணித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து பல வங்கிகள் மீது அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீா் வங்கி நிதி பரிமாற்றம் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கும் ‘பன்னாட்டு ...

சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சந்தையை சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். மேலும் எழும்பூர் சிறைத்துறை அலுவலக்தில் பணியாளர்கள் உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். *சிறைத்துறை டிஜிபி அம்ரேஸ் பூஜாரி உள்ளிட்ட சிறைத்துறை உயர் காவல் ...

ஈரோடு மாவட்டம்:   சத்தியமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை உப கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆறு நாள் தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே இந்த ...

சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ...

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை விற்பனையாளர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இந்த ஆண்டு பருத்தி ஏலம் நேற்று தொடங்கியது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், டிஜி புதூர், கடத்தூர், கோரமடை, பெரியூர், உக்கரம், காராப்பாடி, சிங்கிரிபாளையம், உடையாக்கவுண்டன்பாளையம், பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ...