தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவ – மாணவிகளுக்கான பொது தேர்வு கடந்து 3-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அந்த பொது தேர்வு விடைத்தாள்கள் பத்திரமாக கட்டு காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ...
கோவை அருகே உள்ள நேரு கல்லூரியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் .இந்த கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் அறையில் கடந்த ஒரு மாதமாக பணம் திருட்டுப் போனது. அதை விடுதியில் தங்கி எம்.எஸ்.சி படித்து வரும் மாணவர் ஒருவர் திருடியதாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சந்தேகம் ...
நீலகிரி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமான மசினகுடியில் சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது. மூத்த ஆசிரியர் சந்திர பாபு வரவேற்று பேசுகையில் மசினகுடியில் கடந்த ஆண்டு விட இம்முறை அதிக மழைப்பொழிவு கிடைத்தாலும் அதிக வெயில் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேகமாக வறட்சி நிலை மசினகுடியில் நிலவுகின்றது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டார். உதவி ...
நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சர்வதேச சிட்டு குருவிகள் தினம் உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர், இதில் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதை குறித்தான விழிப்புணர்வு சிறப்புரைகள் வழங்கப்பட்டது மற்றும் மாணவர்கள் சிட்டுக்குருவிகள் அழியாமல் பாதுகாப்பதற்கு மாணவர் கைகளில் சிட்டுக்குருவிகளின் கூடு எப்படி வைக்க வேண்டும் அமைக்க ...
கோவை கோர்சில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது .அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் செல்லின் மேரி, நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ...
கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம்உள்ளது .இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8 வயது சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.அதே பள்ளியில் அவனது அக்காள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில் நேற்று முன் தினம் பள்ளி முடிந்து சிறுவன் வீட்டிற்கு சென்றான். அப்போது பெற்றோரிடம் உடல் வலிப்பதாக கூறி கதறி அழுதான். இதையடுத்து ...
கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் முன் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு, 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் 37,00க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, ...
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 ...