தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப் குருத்வாராவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களில் ஒன்று அவர் மது அருந்தக்கூடியவர் என்பது. மது அருந்திய நிலையில் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்பதுதான் அவர் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்துக்கே ...

தமிழ்புத்தாண்டு உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் ...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ்புத்தாண்டை ஒட்டி சென்னை போயாஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று காலை முதலே அவரது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களில் ஒருவர், தாமரைப்பூவை நடிகர் ரஜினிகாந்திடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை ...

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டிடங்கள், 18 சிறைகள், சீர்திருத்தத்துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 58 தீயணைப்பு மற்றும் ...

காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆகியவற்றின் விஞ்ஞானிகளின் குழுக்கள் கூட்டாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஹெலினா ஏவுகணையானது டிஆர்டிஓவின் ஏவுகணைகள் மற்றும் வியூக அமைப்புகள் (எம்எஸ்எஸ்) கிளஸ்டரின் கீழ் ...

கோயம்புத்தூர் விழா 2022 இன்று தொடங்கியது. 9 நாட்கள் நடக்கிறது. வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.. கோவை ஏப்9.. கோயம்புத்தூர் விழா 2022 இன்று முதல்வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. யங் இன்டியன்ஸ் அமைப்பு சார்பில் இது நடத்தபடுகிறது. இதுகுறித்து அதன் நிர்வாகிகள் கூறியதாவது:- கோயம்புத்தூர்விழா என்பது நமது நகரத்தின் உணர்வைக்கொண்டாட கடந்த 13 ஆண்டுகளாக பல ...

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி செலவில் சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ரூ.70 கோடி செலவில் 389 மருத்துவ வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார் . நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவர், ...

உலகின் மிகப்பெரிய முருகன் சிலை : உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடியில் உள்ளது. தற்போது சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது. 2015-ம் ...

அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல், அக்கட்சியின் தலைமையால் அண்மையில் அறிவிக்கப்பட்டு மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ...

இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பதாக உள்ள பாஜக கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  ஏற்றி வைத்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு ...