கோவை போளுவம்பட்டி வனப்பகுதியில் உடல்நல குறைவால் அவதிப்படும் 8 வயது பெண் யானைக்கு, கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகம் முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, 8 வயது பெண் குட்டியானை உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருவதை கண்டறிந்தனர்.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ...
புதுச்சேரி: 6 டன் எடையுள்ள பாறையை குடைந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் காலமானார். காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு எஸ்.பி.பிக்கு நினைவு இல்லத்தை, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் உருவாக்கி வருகிறார் ...
சென்னை : போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பார்த்து பாராட்டி ஆட்சியரின் 6 வயது மகள் பரிசளித்த சம்பவம் சக காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர் சாலமன் சதீஷ்(44). இப்பகுதியில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் ...
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. ராகுல் காந்தி நூலை வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இந்நூலில் மு.க.ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள், இளமைப்பருவம், ஆரம்பநிலை அரசியல் பங்களிப்பு, திருமண ...
இரிடியம் மோசடி கும்பலிடம் 1.82 கோடியை இழந்த சினிமா திரைப்பட நடிகர் விக்னேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் அளித்த புகார் மனுவில் கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருப்பதாகவும். தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் ...
மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்படாமல் வைக்கப்பட்டு இருந்த நிலையில் கோர்ட் அனுமதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அனைத்து பதவிகளுக்கும் பாண்டவர் அணி தான் முன்னிலையில் இருந்தது. இறுதியில் அந்த அணியை சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி என அனைவரும் வெற்றி பெற்றனர். நீதி, ...
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். 2-ம் தேதி காலை டெல்லி செல்லும் முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு இரவு மீண்டும் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள முக்கிய ...
உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. யோகா குருவான அவர் இந்த வயதிலும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருகிறார்.அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை பெறுவதற்காக, சுவாமி சிவானந்தா யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடந்து வந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், அவருக்கு முன்பாக தரையில் ...
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்றும், தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ...
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது எனவும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து ...