பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று துவங்குகிறது. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மாதம்,22ம் தேதி கம்பம் நடப்பட்டது முதல் பக்தர்கள், வேப்பிலை, மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், ...

சென்னை:சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் உலகமகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு இருவரும் மலர் தூவி ...

தூத்துக்குடி: இந்தியாவிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். துறைமுக நகரமான தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூ.1,000 கோடியில் 1,150 ஏக்கர்பரப்பளவில் ‘சர்வதேச அறைகலன் பூங்கா’ (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என கடந்த ...

மத்திய தொழிலாளர்துறையின் சார்பாக 7 நாட்கள் இலவச மருத்துவம் முகாம் நடைபெற இருப்பதால், இது தொடர்பாக தமிழகம் மண்டல துணை தலைமை தொழிலாளர் கமிஷனர் அருண்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மண்டல தொழிலாளர் அமைப்பு சார்பாக மார்ச் 7 (இன்று) 13ஆம் தேதி வரை ...

கோவை:கோவை மாநகராட்சியின் புதிய துணை மேயராக பதவியேற்ற வெற்றிச்செல்வன், தனது தாயை துணை மேயர் இருக்கையில் அமர வைத்து, அழகு பார்த்தார்.கோவை மாநகராட்சி பிரதான அலுவலகமான விக்டோரியா ஹாலில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., மேயர் வேட்பாளரான கல்பனாவும், துணை மேயர் வேட்பாளரான வெற்றிச்செல்வனும் போட்டியின்றி, ஒருமனதாக ...

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக சார்பில் இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் அவர்களின் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் தளபதி அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் மாமண்டூரில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட குழு பெருந்தலைவர் செம்பருத்தி, மதுராந்தகம் வடக்கு ...

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் படித்து வரும் ரிஷப் கவுஷிக் என்ற இந்திய மாணவர், தான் வளர்த்து வரும் நாயை விட்டு அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மேலும் நாயுடன் இந்தியா வர உதவிடுமாறு சமூக வலைத்தளங்களில் அவர் வேண்டுகோள் ...

இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை நடத்து வார இறுதி நாட்களில் நடத்தி ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்தநாள் விழா பிப்ரவரி 28ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது. இருபத்தி எட்டாம் தேதி திங்கட்கிழமை அன்று காலை மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சித்தர்பீடம் வந்த ஆன்மிககுரு பங்காரு ...

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.. இதனை அடுத்து 28ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. இதில் அதிமுக திமுக இதர கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் சித்தயங்கோட்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ...