சென்னையில் அண்மையில் தமிழக முதல்வர் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார். மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவுக்கு சிறந்த பணிக்கான விருது கிடைத்தது. இதுகுறித்து காவல் ஆணையர் கூறியதாவது: மதுரை நகரில் குற்றங்களை தடுக்க 4 திட்டங்களை முன்னெடுத்தோம். பழைய ...

மாற்றுத்திறனாளி மகனுடன் வசிக்கும் போக்குவரத்து துறை ஊழியருக்கு மாவட்ட ஆட்சியர் வீடு ஒதுக்கி அதிரடியாக உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் வீட்டுமனை பட்டா கேட்டு 6 மனுக்கள், இலவச வீடு கேட்டு 55 மனுக்கள், வேலை வாய்ப்பு கேட்டு 15 மனுக்கள் உள்பட 308 கோரிக்கை மனுக்கள் ...

சென்னை: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அசோக்நகரில் நாளை (இன்று) தொடங்குகிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் படும். இந்த வயதுக்குட்பட்ட சுமார் 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோர்பி ...

வாஷிங்டன்: நேட்டோ, ஜி-7 ஆகிய அமைப்புகளை தவிர, உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென் சாகி நேற்று அளித்த பேட்டி வருமாறு: ...

கோவை அருகே உள்ள பேரூரில் அருள்மிகு பட்டீஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலில் தேரோட்டம் இன்று ( செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. இதனால் பேரூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறுவாணி ரோடு-பேரூர் ரோட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து பேரூர் வழியாக ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி ,செம்மேடு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ...

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவியை ராஜ் பவனில் சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு விவகாரம் முக்கிய பேசுபொருளாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நீட் பாதிப்பு தொடர்பாக ஆய்வு ...

சென்னை: சென்னை தரமணியில், “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ...

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. ...

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு சசிதரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி மிகவும் தைரியமானவர், சுறுசுறுப்பானவர். அரசியல் ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய ...

சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், வீடுகளில் இருந்து பதறியடித்தபடி வெளியே வந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். நடுநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா என்ற ...