சென்னை மேயர் ப்ரியா, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பாரிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகம்மாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானத்தை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாமி ...

மதுரையில் தனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணியின் மறைவுக்கு அவரது மனைவியிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினி ஆறுதல் கூறினார். மதுரையைச் சேர்ந்த முத்துமணி (65), நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் பெயரில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கடந்த 1976ஆம் ஆண்டு மதுரையில் ரஜினிக்கு மன்றம் தொடங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தார். முத்துமணி ...

கோவை: ”கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்” என கோவையில் நடந்த தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்என் ரவி பேசினார். இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் கோவையில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் ...

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மன், மார்ச் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார். 48 வயதான பக்வந்த் மன் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். அவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். பகவந்த் சிங் மன், ஒரு முன்னாள் நகைச்சுவை நடிகர் ஆவார். தொலைக்காட்சியில் ‘ஜுக்னு மஸ்த் ...

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை ...

கேக்கை வைத்து மிலன் கதீட்ரலின் கட்டிடத்தின் மாதிரியை உருவாக்கிய பெண்மணி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்த பெண்மணி பிராச்சி தபால் டெப். இவர் கேக்கை பல்வேறு பொருட்கள் போல வடிவமைக்கும் கலைஞர் ஆவார். இந்நிலையில், தபால் டெப்புக்கு கேக்கை வைத்து மாபெரும் கட்டிடத்தின் பிரதியை உருவாக்கி உலக ...

கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தில் அருள்மிகு .திரிபுரசுந்தரி அம்மன் தொட்டிச்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோவை காமாட்சிபுரி ஆதீனம் குருமகா சன்னிதானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருக்கரங்களால் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் அருள் உரையாற்றினார். சிறப்பு ...

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேவிகாபுரம் 500 ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும். இதில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒரு நாள் திருவிழா நடத்துவதற்கு பட்டியலின வகுப்பை சேர்ந்த நபர் நடத்துவதற்கு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ...

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று துவங்குகிறது. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மாதம்,22ம் தேதி கம்பம் நடப்பட்டது முதல் பக்தர்கள், வேப்பிலை, மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், ...

சென்னை:சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் உலகமகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு இருவரும் மலர் தூவி ...