ஆவடி: ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்தனர். ஆவடி காவல் ஆணையரகம், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸுடன் இணைந்து, பள்ளி மாணவ – மாணவிகளின் பங்கேற்பில் உலக சாதனையை உருவாக்கும், ...
கோவை ஈஷா யோக மையத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு “இன்னர் இன்ஜீனியரிங் லீடர்ஷிப் ரிட்ரீட்” என்ற யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சத்குரு அவர்கள் வழிநடத்திய இப்பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.ஓ உயர் அதிகாரிகள் பங்கு பெற்றனர். இந்த பயிற்சி வகுப்பில் இதுவரை 800-க்கும் அதிகமான அதிகாரிகள் கலந்து கொண்டு ...
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ குங்குமவல்லி தாயாருக்கு 74 வது ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை ஸ்ரீ குங்குமவல்லி- வளைகாப்பு நாயகி என்று அழைக்கப்படுகிறார். வருடம் தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் தொடர்ந்து 74 ...
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க 40.26 ...
நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை மத நல்லிணக்க தினமாக கடைபிடிக்க கடைபிடிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் . இதனையொட்டி தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அப்போது ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு வழி ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் பாதுகாவலர்கள், ...
கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தியும் நேற்று மினி மராத்தான் ஓட்ட போட்டி நடந்தது. மராத்தான் போட்டியை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி .ஜி . பி . சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மராத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார் .2 ...
கோவை ஒண்டிபுதூர்,காமாட்சிபுரத்தில் 51 சக்தி பீடம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இங்கு 43 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் மகா உற்சவம் குண்டம் திருவிழா கடந்த 22 ஆம் தேதி முதல் நேற்று 28ஆம் தேதி வரை நடந்தது.நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன் – விஜயா ஆகியோர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் 19 வது ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதியன்று திருக்கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கிய நிலையில் இன்றைய தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு ...
கோவை: நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போன்று கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், ...