நெல்லை மாவட்டம் இட்டேரியில் எளிமையாக நடைபெற்ற முடிந்த அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வன் திருமணம் நடந்தது. போர் தொழில் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அசோக் செல்வனுக்கு நெல்லையில் திருமணம் நடந்து முடிந்தது. அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன். ...

தமிழ்நாட்டில்  தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில்  தமிழ்ச்  செம்மல் விருது, தமிழ்வளர்ச்சித்துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்“ விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் ...

கோவை : தமிழ்நாடு காவல் துறையின் 5-வது போலீஸ் கமிஷன்கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் இன்று நடந்தது.தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்,ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் , தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு முன்னாள் ...

தஞ்சாவூர் சங்கம் ஓட்டலில் மீனாட்சி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம்  இணைந்து இன்வெஸ்டிகான் 2023 என்ற பெயரில் இந்தியாவிலேயே முதல் முறையாக பசுமை மருத்துவ மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.        இதில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை மருத்துவர்கள் எளிதில் சரியாக புரிந்து ...

சர்வதேச ரெட்கிராஸ் அமைப்பு முதலுதவி பயிற்சியை ஊக்குவிப்பதற்காக 2000 ஆம் ஆண்டு உலக முதலுதவி தினத்தை அறிமுகப்படுத்தியது.‌ ஒவ்வொரு ஆண்டும், உலக முதலுதவி தினம் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று, முதலுதவி பற்றியும் எவ்வாறு ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றவும் முடியும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு, உலக முதலுதவி தினம் செப்டம்பர் ...

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்காட்டுப் பள்ளி பூண்டிமாதா பேராலயம் அன்னை பிறப்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி திருவிழா வான வேடிக்கையுடன் கோலாகலமாக நடைப்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் 300 ...

தஞ்சை சிராஜ்புர் நகர். பத்தாவது தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர், வங்கியில் அடமானம் வைத்து இருந்த மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 சவரன் தங்க நகைகளை மீட்டு பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு செல்லும் வழியில் தஞ்சை ஆற்று பாலம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் டீ ...

தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா நவநீதபுரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் , பரிசுகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வளாகத்தில் செயல்படாமல் உள்ள நூலகத்தை பார்வையிட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் மழை வேண்டி கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மழை பெய்ய வேண்டிய முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒரே நிற ...

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சகோதர, சகோதரிகள் இடையே நிலவும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கை மணிக்கட்டில் ரக்ஷா பந்தன் கயிறை ...