விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- விநாயகர் சிலைகளின் பாதுகாப்புக்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். சிலைகளை கரைக்கும் வரை ...
கோவை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்து ...
கோவைக்கு முதலமைச்சர் வருகையையொட்டி மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக அறை குறையாக பணிகளை செய்து வந்தாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு வருகை தந்து உள்ளார். இன்று ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் பொள்ளாச்சி ...
கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச் சென்ற பொதுமக்கள் கோவை: கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற நலத் திட்ட நிகழ்ச்சி முடிந்த கையோடு அங்கிருந்த பொதுமக்கள் தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் இளநீர் ஆகியவற்றை தூக்கி சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ...
கோவை வந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். இதற்காக, கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலைய நுழைவாயில் முதல் மெயின் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது . இப்பயிற்சியில் மாணவர்களிடம் பெற்றோர்கள் எவ்வாறு புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ...
பெரியார் அண்ணா கலைஞர் சங்கமித்த கோவைக்கு முதல்வர் வந்துள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி உரை. கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ...
முதல்வர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு நடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு நலத் ...
தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன்- முதல்வர் உரை கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 ...
பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அசோக்குமார், 100 கிடா வெட்டி 10,000 பேருக்கு அசைவ விருந்து வைத்து நடத்திய மொய் விருந்து விழாவில் ரூ10 கோடி மொய் வசூலாகியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மொய் விருந்து வரலாற்றிலேயே இதுவே அதிகபட்சம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ...