கோவை துடியலூர் ரயில்வே கேட்டில் டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி நீலகிரி விரைவு ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ரயில் லாரிக்கு 50 மீட்டர் முன்னதாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் ...

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்த 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இது ...

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுங்கள்.கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: 75வது சுதந்திர திருநாள் ...

கோவில் திருவிழாவில் மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராம மக்கள்.  கோவை அன்னூர் இந்திரா நகர் பகுதியில் அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பன்றிகளுக்கு ...

கைத்தறி ஆடைகளுக்காக ஆடை அலங்கார அணிவகுப்பு விழா : கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி! கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ , கோவை மக்கள் சேவை மையம் & Dream zone நிறுவனம் சார்பில் தொடர்ந்து “தேசிய கைத்தறி ...

பத்து கோடி கோவில் சொத்து மீட்பு  கோவை செளரிபாளையத்தில் சக்தி மற்றும் கருமாரியம்மன் கோவில் சொந்தாமான 27.78 சென்ட் காலி இடத்தில் ஆர் ஒ தண்ணிர் நிறுவனம் அனுமதி பெறமால் நிறுவனம் வைத்து செயல்படித்தி வருகிறது , இதை அறிந்த உதவி ஆணையர் தலைமையில் நேரடியாக கள ஆய்வு செய்து வருவாய் துறை அதிகரிகள் துணையோடு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காடம்பாறை, கல்லார் குடி, உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்கள் அனைவரின் நலன் கருதி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் பழங்குடியின மக்கள் தினவிழா நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி மேலாளர் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னதாக ...

காமன்வெல்த்தில் நடைபெற்ற பெண்களுக்கான (50 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் கூறியதாவது ; ‘எனது நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (தங்கம் வென்று) தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்… ஆனால் என் ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ...

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ...