முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்திய 3 மணி நேர சிறப்பு யாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் பக்தர்களும் இந்து அமைப்பினர்களும் கொதித்து எழுந்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டு இருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேற்று சிறப்பு யாகம் ...
*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...
கோவை ரெயில் யார்டு அருகே வாலிபர் ஒருவர் ரெயில் மோதி 2 துண்டுகளாக இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இருந்த வாலிபரின் உடலை பரிசோதனை ...
சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சங்கீதா (வயது 42). இவர்களுக்கு சங்கவி என்ற மகள் உள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு சங்கீதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். அவர் திடீரென மாயமானார். அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் ...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சிதையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சேடபட்டி அருள்மிகு ஸ்ரீ சின்ன பகவதி அம்மன் 48 வது நாள் மண்டல பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் கடந்த 48 நாட்களுக்கு முன்னால் முடிவுற்றதை தொடர்ந்தும் கும்பாபிஷேகம் முதல் மூன்று பட்சம் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம் ...
கோவையில் கடந்த சில நாட்களாக சாரால் மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று நேற்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவையில் உள்ள அவினாசி பாலம், வடகோவை பாலம், லங்கா கார்னர் உள்பட பலங்களின் அடியில் மழைநீர் தேங்கியது. பலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பல்வேறு இடங்களில் கடுமையான ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே ...
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனசரகங்கள் உள்ளன. இதில் உலாந்தி வனசரகத்தில் உள்ள கோழிகமுத்தியில் வனத்துறையின் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் உள்ளனர். இந்த முகாமில் ...
கோவை: கோவை மாநகரில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் சைபர் கிளப் துவக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சைபர் குற்றங்களை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆட்சேபகரமான வீடியோ போட்டோக்கள் வெளியாவதை தடுக்க இந்த சைபர் குழுக்கள் ...
கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது. அங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 கரடிகள் சிக்கின. மற்றொரு கரடி தப்பி ஓடியது. மீண்டும் கூண்டு வைக்கப்பட்டாலும், அதில் சிக்காமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வருகிறது. சமீபத்தில் குன்னியட்டி கிராமத்தை ...