விருதுநகர்: குஜராத்தில் இன்று டிஜிட்டல் திருவிழா நடக்க உள்ள நிலையில், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் பிரதமர் மோடியுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து கலந்துரையாடுகின்றனர். குஜராத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகிலும் விளைநிலங்களிலும் புகுந்து வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சமயபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சமயபுரம் கிராமப் பகுதியின் சாலை வழியாக காட்டு ...

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த பதவி தற்போது இல்லையென இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. ...

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறைஇன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என ...

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தில் 12 ஆம் மாணவ, மாணவிகளுக்கான “தழைக்கட்டும் நமது தலைமுறை-2022” என்ற தலைப்பிலான வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று துவங்கி வைத்தார். கோவை மாநகர பீளமேடு பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் ...

வேலூர்: சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவையொட்டி அகில பாரதிய சன்யாசிகள் சங்க மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ...

என்னை மூன்றாம் கலைஞர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான ...

தமிழகத்தின் கொரோனா அதிகரித்த 6 மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நகரங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. ...

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு என்றால் கிராம மக்கள் அனைவரும் பயமின்றி ஏதோ செல்லப்பிராணி போல் கொண்டாடுகின்றனர். அதுவும் ஏதோ தண்ணீர் பாம்பு என நினைத்துவிடாதீர்கள். அவை அனைத்துமே நாகப்பாம்புகள். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது சேத்பல் என்ற கிராமம். இது மோஹோல் தாலுகாவுக்கு ...

கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தற்போது தமிழ்நாடு,கேரளா, டெல்லி, கர்நாடகம், , அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 43 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 ...