பீகார் மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என ஒரே நாளில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் தலா ...

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்கொலையில் உயிரிழந்திருப்பார்கள் என யூகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர். இதில் போபத் ...

கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபது ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி ...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட துணை சுகாதார பணிகள் இணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ...

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (17.6.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்கள் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் ...

தவறான இடங்களில் கார், டூ வீலர் பார்க்கிங் செய்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பார்க்கிங் தொடர்பான புதிய சட்டம் வர உள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ...

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் எப்போது திருமணம் ...

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். ஜெர்மன் ...

ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் அவருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அருகில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற முதல்வர் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியரான ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ...