கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கில் அப்படி உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் குடமுழுக்கு நடத்த ...

நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கட்சியினரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் இரு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் நடைபெற்றது. ஐதராபாத்தின் சர்வதேச மாநாடு மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 19 மாநில முதலமைச்சர்கள், மத்திய ...

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறும் அரசாங்க பொருட்காட்சியை கண்டு ரசித்த பழங்குடி மக்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பாடுகளை பழங்குடிகள் அறியும் விதமாக அமைந்த பொருட்காட்சி இயற்கையின் அரவணைப்பில் மலையோடும் மழையோடும் நகர்புற சாயத்தை கலக்காமல் வாழ்ந்துவருபவர்கள் மலைவாழ் பழங்குடியினர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், மட்டுமின்றி நகர்புற கேளிக்கைகளை பற்றியும் ...

கோவை மத்திய சிறை வளாகத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெற்று வந்தது 19 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் ஒவ்வொரு நாள்தோறும் தமிழக அரசின் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் .பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் யானைகள் ...

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று மாலை தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி முதலில் தெலுங்கில் பேசி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர் ஹிந்தியில் பேசியதாவது. தெலங்கானா ...

விருதுநகர்: குஜராத்தில் இன்று டிஜிட்டல் திருவிழா நடக்க உள்ள நிலையில், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் பிரதமர் மோடியுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து கலந்துரையாடுகின்றனர். குஜராத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகிலும் விளைநிலங்களிலும் புகுந்து வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சமயபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சமயபுரம் கிராமப் பகுதியின் சாலை வழியாக காட்டு ...

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த பதவி தற்போது இல்லையென இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. ...

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறைஇன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என ...

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தில் 12 ஆம் மாணவ, மாணவிகளுக்கான “தழைக்கட்டும் நமது தலைமுறை-2022” என்ற தலைப்பிலான வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று துவங்கி வைத்தார். கோவை மாநகர பீளமேடு பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் ...