தவறான இடங்களில் கார், டூ வீலர் பார்க்கிங் செய்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பார்க்கிங் தொடர்பான புதிய சட்டம் வர உள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ...

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் எப்போது திருமணம் ...

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். ஜெர்மன் ...

ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் அவருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அருகில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற முதல்வர் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியரான ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ...

நாட்டிலுள்ள ஒவ்வொரு தம்பதிகளும் மூன்று குழந்தைகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு கட்டாயப்படுத்துவதால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சீனா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் இளைஞர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ...

2047 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் தலைவராக இந்தியா மாற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58வது நிறுவன நாள் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு ...

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது விருந்து நடந்து வருகிறது. விருந்தில் சுத்தமான சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது. இதோ அந்த உணவு வகைகள். பன்னிர் பட்டானிக்கறி பருப்புக் கறி அவியல் மோர் குழம்பு மிக்கன் செட்டிநாடு கறி உருளை கார மசாலா வாளைக்காய் வருவல் சென்னா கிழங்கு வருவல் சேப்பக்கிழங்கு ...

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் எண்ணிலடங்கா பக்தர்கள் மாலை அணிந்து இருமுடியும் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 14 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை ...

அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலூ தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தலைமையேற்று பேசிய எ.வ.வேலு செய்தியாளர்களை ...