கோவையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்பட வசனத்தை திமுகவினரும், மக்கள் நீதி மய்யத்தினரும் போஸ்ட்டராக அடித்து ஓட்டியிருப்பது சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட் ” திரைப்படம் மே 7 ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக ...

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 7 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 2,02,385 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்சர், சரேடியோ, ...

சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக ...

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருப்பூர், அவினாசி, கோவை அரசு , மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து புதிய குழந்தைகளுக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு, கொரோனா ஐ.சி.யு பிரிவு, இருதய நோய் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ...

பாரதியார் பல்கலைகழகத்தில் இன்று 37 வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றுள்ளது. படித்து முடித்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கும் இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக வீடியோ காட்சிகளும், புகைபடங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றது. பல்கலை கழக நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளை கோயமுத்தூர் ...

வடகோவை – பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த முதியவரின் உடலை சோதனை செய்தனர். அவர் ஸ்வெட்டர் ...

பெங்களூரு: கர்நாடகாவில் மசூதிகளில் ‘அஸான்’ எனப்படும் பாங்கு ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பஜனை பாடல்களை பாடும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் ...

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி, மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த ...

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவர். கடந்த 2017-ம் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்தார் சவுதாலா. அங்கிருந்தபடியே 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கில பாடத் தேர்வை மட்டும் ...

உலகம் முழுவதும் கொரோனா கோர தண்டவம் ஆடியபோதும், வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அந்நாடு தெரிவித்துவந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை உடனடியாக மூடியதுடன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு ...