பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த 3 வாரங்களில் 7 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக அம்மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில் மேற்குவங்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு ...
செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம் பிடித்து நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம் பிடித்து நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ராக்கெட் லேப் என்ற நிறுவனத்தின் ...
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட உள்ளதாக மதுரை ஆதீனம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி அப்பர் சப்பரத்தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று களிமேடு பகுதிக்குச் ...
ஆனைமலை: ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (55). கோட்டூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மரத்தின்மீது சிறுத்தை ஒன்று இருப்பதை கண்டு பீதியடைந்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் தோட்டத்து உரிமையாளர் கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ...
நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுனர், உள்துறை அமைச்சகத்திற்கு மசோதாவை அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ...
தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோடை காலத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாம் என்ன செய்ய வேண்டும்? *அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். *பயணத்தின் போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். *ஓஆர்எஸ், எலுமிச்சைச் சாறு, இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும். *முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும். *காற்றோட்டம் உள்ள ...
சென்னை : சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். சாலை) இனி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்று என நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ...
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் ...
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் பல வண்ண ஒளிவட்டம் தோன்றியது. வானம் மேகமின்றி தெளிவாக உள்ள நிலையில், ஒளி வட்டம் வானவில் போல பல வண்ணத்துடன் காட்சி அளித்தது. பொதுமக்கள் இந்த ஒளிவட்டத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். வெளிப்புறம் இளம்பழுப்பு நிறம், உட்புறம் சிவப்பு மற்றும் பிற வண்ணக் கலவையுடன் ரசிக்கும்படி ...
இயக்குநர் கே.பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரவசத்தில் பிறந்தவர்கள் எனக் கூறியதற்காக மன்னிப்புக் கோரினார். புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் ...